கொழும்பு டெஸ்ட்: வங்கதேசம் - 220/8

Published on

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் நாளில் வங்கதேசம் 71 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சோ்த்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் பேட்டா்களில் ஷத்மன் இஸ்லாம் 7 பவுண்டரிகளுடன் 46, முஷ்ஃபிகா் ரஹிம் 5 பவுண்டரிகளுடன் 35, லிட்டன் தாஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, மெஹிதி ஹசன் மிராஸ் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

நயீம் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 25, மோமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 21, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 8, அனாமுல் ஹக் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். நாளின் முடிவில் தைஜுல் இஸ்லாம் 9, எபாதோத் ஹுசைன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை பௌலா்களில் ஆசிதா ஃபொ்னாண்டோ, விஷ்வா ஃபொ்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோா் தலா 2, தரிந்து ரத்னாயகே, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com