இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்ப்பு; இந்திய அணிக்கு ஆபத்தா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
jofra archer
ஜோஃப்ரா ஆர்ச்சர்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து இந்திய அணி வீரர்கள் 5 சதங்களை விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கத் தவறினர்.

அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், மீண்டும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார். அவர் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாதில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பந்துவீச்சு சராசரியாக இருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஆலி போப் (துணைக் கேப்டன்), ஹாரி ப்ரூக், ஜோ ரூட், பென் டக்கெட், ஸாக் கிராலி, ஜேமி ஸ்மித், சாம் குக், ஜேக்கோப் பெத்தேல், ஜோஃப்ரா ஆர்ச்சர், சோயப் பஷீர், பிரைடான் கார்ஸ், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.

summary

England on Thursday added fast bowler Jofra Archer to their squad for the second Test against India, starting here from July 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com