அதிக அரைசதங்கள்: ஜோ ரூட் சாதனை!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்த சாதனை குறித்து...
England's Joe Root celebrates after scoring fifty runs on day five of the first cricket test match between England and India at Headingley
ஜோ ரூட். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஜோ ரூட் (34 வயது) 2012 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை, 154 போட்டிகளில் விளையாடி 13, 087 ரன்கள் குவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28, 53* ரன்கள் எடுத்து அசத்தினார்.

இத்துடன் டெஸ்ட்டில் 66 அரைசதங்களை நிறைவு செய்து 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இருக்கிறார்.

குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கும் ஜோ ரூட் விரைவிலேயே சச்சினின் இந்த சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள்

1. சச்சின் டெண்டுல்கர் - 68

2. ஜோ ரூட் - 66

3. ஷிவ்நரைன் சந்திரபால் - 66

4. ஆலன் பார்டர் - 63

5. ராகுல் திராவிட் - 63

6. ரிக்கி பாண்டிங் - 62

7. ஜாக் காலிஸ் - 58

8. அலைஸ்டர் குக் - 57

9. விவிஎஸ் லக்‌ஷ்மணன் - 56

10.குமார் சங்ககாரா - 52

summmary

Joe Root is on the course to break Sachin Tendulkar's record for the most half-centuries in Test cricket. He is only three short of breaking Sachin's legendary record.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com