இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!

இலங்கை கிரிக்கெட் வீரர் பதும் நிசாங்கா குறித்து...
Nissanka is overjoyed to have scored a century...
சதமடித்த மகிழ்ச்சியில் பதும் நிசாங்கா...படம்: எக்ஸ் / இலங்கை கிரிக்கெட் வாரியம்
Published on
Updated on
1 min read

இலங்கை கிரிக்கெட் வீரர் பதும் நிசாங்கா வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் சதம் அடித்து அசத்தினார்.

பதும் நிசாங்கா (27 வயது) கடந்த 2021 முதல் இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 18 டெஸ்ட் போட்டிகளில் 1,247 ரன்களை குவித்துள்ளார்.

டெஸ்ட்டில் 7 அரைசதங்கள், 4 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இலங்கை மண்ணில் 2-ஆவது முறையாக சதம் அடித்துள்ளார்.

வங்கதேசம் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 247-க்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 203/1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் பதும் நிசாங்கா 101, தினேஷ் சண்டிமால் 59 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள்.

டெஸ்ட்டில் மொத்தம் 4-ஆவது சதத்தை நிறைவு செய்துள்ள பதும் நிசாங்கா சொந்த மண்ணில் அடித்த 2-ஆவது சதமாகும். இந்த இரண்டுமே வங்கதேசத்துக்கு எதிராக அடித்துள்ளார்.

கடந்தாண்டும் சரி இந்தாண்டும் சரி சிறப்பாக விளையாடிவரும் பதும் நிசாங்காவை இலங்கை கிரிக்கெட்டின் மிஸ்டர் டிபெண்டபிள் (மிகவும் நம்பிக்கைக்குரியவர்) என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

Summary

Fans call Pathum Nissanka, who has been playing well both last year and this year, Mr. Dependable of Sri Lankan cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com