ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாவட்ட கல்வி அதிகாரியாகும் ரிங்கு சிங்: 8-ஆம் வகுப்பு படித்தவருக்கு இந்தப் பதவியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அளிக்கப்பட்ட பதவி குறித்து...

Indian cricketer Rinku Singh.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். - படம்: எக்ஸ் / ரிங்கு சிங்.

Published On :26 ஜூன் 2025, 2:28 pm IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உ.பி. மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 வயதாகும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வானார்.

சமீபத்தில், சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்தமாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், கிரிக்கெட் தேதிகளால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உ.பி. அரசாங்கள் ரிங்கு சிங்கை கௌரவிக்கும் பொருட்டு 2022 விதியின்படி அவரை மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினரை திருமணம் செய்தாலும் பாஜக அரசு அவருக்கு பதவி வழங்குவது பாராட்டைப் பெற்று வருகிறது.

ரிங்கு சிங் 9-ஆவது வகுப்பின் பாதியிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவிக்காக சிலர் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ரிங்குவை விமர்சித்தும் வருகிறார்கள். சிலர், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வென்றும் கூறி வருகிறார்கள்.

Summary

Rinku has now received a government appointment from the Yogi Adityanath-led Uttar Pradesh government. The cricketer has been named Basic Education Officer (BSA) under direct recruitment rules.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.