

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.
வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.
16 பேர் கொண்ட இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்
சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, நிசான் மதுஷ்கா, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநாகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, மிலன் ரத்னாயகே, தில்ஷன் மதுஷங்கா, அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் ஈசன் மலிங்கா.
summary
The Sri Lanka Cricket Board announced the squad for the ODI series against Bangladesh today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.