மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்கிறேன்: பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்கிறேன்: பிரசித் கிருஷ்ணா
படம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா 200 ரன்களுக்கும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) அதிகமாக விட்டுக்கொடுத்தது விமர்சனத்துக்கு உள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் அவரது பந்துவீச்சு குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

முழுமையாக பொறுப்பேற்கிறேன்

பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சுக்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாக பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான் நினைத்தது போன்று பந்துவீச முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் சரியான லென்த்தில் என்னால் பந்துவீச முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சு லென்த்தை மாற்றி, முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் நன்றாக பந்துவீசினேன்.

விக்கெட் எடுப்பதற்காக முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. காரணங்கள் கூறுவது சரியான விஷயமாக இருக்காது. நான் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முடியாததற்கு முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

Prasith Krishna has said that he takes full responsibility for his poor bowling performance in the first Test against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com