முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.
Zimbabwe player Sean Williams celebrates after scoring a century
சதம் விளாசிய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ்படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூன் 28) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 164 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 16 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கிரைக் எர்வின் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோடி யூசுஃப் மற்றும் கேப்டன் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி, ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 167 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The South African team is in a strong position heading into the first Test match against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com