2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து; ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.
England players
இங்கிலாந்து வீரர்கள்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 30) அறிவித்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் விவரம்

ஸாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடான் கார்ஸ், ஜோஷ் டங், சோயப் பஷீர்.

குடும்பத்தில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்று (ஜூன் 30) பயிற்சியில் ஈடுபடாதது குறிப்பிடத்தக்கது.

Summary

The England Cricket Board announced the playing eleven for the second Test against India today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com