
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஈடுபடவில்லை.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.
2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?
நாளை மறுநாள் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பயிற்சியில் ஈடுபடாதது இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரநிலை காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்று (ஜூன் 30) இங்கிலாந்து அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவில்லை. அவர் நாளை மீண்டும் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அண்மையில் அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சராசரியாக இருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
England fast bowler Jofra Archer has not been involved in training for the second Test against India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.