தோனி
தோனிபடம்| சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு

‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் கோரினார் தோனி!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்பை பதிவு செய்திருப்பது பற்றி...
Published on

கிரிக்கெட் வீரர் தோனி ‘கேப்டன் கூல்’ தலைப்புக்கு ட்ரேட்மார்க் அங்கீகாரம் உரிமை கோரினார். தோனி மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பெரும்பாலும் ‘கேப்டன் கூல்’ என்றே அழைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், தோனி தமக்கே அந்த ‘கேப்டன் கூல்’ தலைப்பை அங்கீகரிக்கக் கோரி ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து, ட்ரேட் மார்க்ஸ் பதிவேட்டுத் தளத்தில், தோனி தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பம் ‘ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் அது குறித்த விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி தரப்பிலிருந்து ட்ரேட் மார்க்ஸ் பதிவேட்டுத் தளத்தில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்த விளம்பரம் ஜூன் 16-ஆம் தேதி செய்யப்பட்டது.

Summary

MS Dhoni seeks trademark for ‘Captain Cool’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com