
துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், இன்று(மார்ச் 5) பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) துபையில் நடைபெற உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 362 ரன்களைக் குவித்தது.
இதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி கடுமையாகப் போராடியது. எனினும், அந்த அணியால் 50 ஓவர்களில் 312 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் தென்னாப்பிரிக்காவின் சாம்பியன்ஸ் டிராபி கனவு தகர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்று ருத்ரதாண்டவம் ஆடிய டேவிட் மில்லரின் சதம் வீணானது(67 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள்).
பேட்ஸ்மென் ஸ்கோர் கார்டு:
நியூசிலாந்து
ரச்சின் ரவீந்திரா - 108
கேன் வில்லியம்ஸன் - 102
டேரில் மிட்செல் - 49
க்ளென் பிலிப்ஸ் - 49(ஆட்டமிழக்கவில்லை)
ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்கா
டெம்பா பௌமா - 56
ராஸ்சி வேன் டெர் டசன் - 69
ஏடென் மார்க்ரம் - 31
டேவிட் மில்லர் - 100(ஆட்டமிழக்கவில்லை)