சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்! -விராட் கோலி

சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி...
விராட் கோலி...
Published on
Updated on
1 min read

சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடிய இந்திய 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக சோபிக்காத நிலையில் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விராட் கோலி - ஷ்ரேயஸ் இருவரும் நிதானமாக விளையாடி 91 ரன்கள் பாட்னர்-ஷிப் அமைத்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

விருது வழங்கிய பின்னர் விராட் கோலி பேசுகையில், “ஆட்டம் தொடங்கியது முதலே மெதுவாக விளையாடினேன். பாகிஸ்தான் போட்டியைப் போன்றுதான் இங்கேயும் மெதுவாக ஆடினேன். சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆட வேண்டும்.

ஒரு ரன்கள் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். ஆட்டத்தின் போக்கை கவனத்தில் கொண்டு பாட்னர்-ஷிப் அமைப்பது மிகவும் முக்கியமானது.

நமக்கு தடையாக இருக்கும் விஷயங்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. நான் அதைப் பற்றி கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி பேசுவதும் இல்லை. நீங்கள் சாதனைகளை எதிர்பார்க்காமல் விளையாடினால் போதும் அது உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

நான் என்னுடைய சதத்தைப் பற்றி கவலையடையவில்லை. என்னுடைய அணியின் வெற்றிக்கு எது தேவையோ அதைத்தான் செய்தேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com