
வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர்களிலும் 4 சதங்கள் அடித்துள்ளார்.
மஹ்மதுல்லா தனது 17 வருட கிரிக்கெட் பயணத்தில் 430 போட்டிகளில் 11,047 ரன்கள், 166 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2007இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய மஹ்மதுல்லா 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான போட்டியில் கவனம் பெற்றார்.
ஒருநாள் உலகக் கோப்பையில் 3 சதமடித்த ஒரே வங்க தேச வீரராக மஹ்மதுல்லா மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை
ஓய்வு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மஹ்மதுல்லா கூறியதாவது:
நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். என்னை ஆதரித்த ரசிகர்கள், பயிற்சியாளர், எனது அணியினர் அனைவருக்கும்m இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன்.
எனது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவியின் பெற்றோர் குறிப்பாக எனது மாமனார், மிகவும் முக்கியமாக எனது சகோதரர் எம்தாத் உல்லாஹ் எனது சிறுவயது முதல் என்னுடைய ஆலோசகராக பயிற்சியாளராக இருந்துள்ளவருக்கும் நன்றிகள்.
கடைசியாக எனது மனைவி, குழந்தைகளுக்கும் நன்றிகள். எனது குழந்தை ரயீத் என்னை சிவப்பு & பச்சை வண்ண ஜெர்சியில் பார்ப்பதை மிஸ் செய்வான். எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை. ஆனால், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வங்கதேச கிரிக்கெட்டுக்கும் எனது அணிக்கும் வாழ்த்துகள் என்றார்.