முத்தரப்பு கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிரணி!

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
இந்திய மகளிரணி
இந்திய மகளிரணிபடம்:எக்ஸ் / பிசிசிஐ மகளிர்
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க மகளிருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிரணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்.27ஆம் தேதி தொடங்கியது.

இதன் 5-ஆவது லீக் போட்டியில் இன்று (மே.7) கொழும்புவில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 337/9 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 123 ரன்கள் அடித்து அசத்தினார். ஆட்ட நாயகி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 314/7 ரன்கள் எடுத்து தொல்வியுற்றது.

4 போட்டிகளில் 3-இல் வென்ற இந்திய அணியும் 3 போட்டிகளில் 2-இல் வென்ற இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகின.

தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மே.11ஆம் தேதி கொழும்பிவில் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com