இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து...
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.
Published on
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் மட்டும் சாய் சுதர்சன் 509 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் முதல்முறையாக 500 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை நிகழ்த்திய சாய் சுதர்சன் குறைவான போட்டிகளில் 1500 ரன்களைக் கடந்த சச்சின் சாதனையையும் முறியடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமானார். 3 போட்டிகளில் 127 ரன்கள் அடித்துள்ளார்.

தற்போது, டெஸ்ட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதால் தொடக்க வீரருக்கான இடம் காலியாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடிக்கொண்டுள்ள சாய் சுதர்சனை தொடக்க வீரராக தேர்வு செய்யாலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 1,396 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 60.69ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துடன் இந்திய அணி ஜூனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com