
மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ராஸ்டன் சேஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கிரைக் பிரத்வெயிட் கடந்த மார்ச் மாதத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனையடுத்து, மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக ராஸ்டன் சேஸும், துணைக் கேப்டனாக ஜோமெல் வாரிக்கேனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து அணியை வழிநடத்தவுள்ளனர். அந்த தொடரிலிருந்து இரு அணிகளுக்குமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான சுழற்சியும் தொடங்குகிறது.
இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய இயக்குநர்களின் ஒருமித்த கருத்தோடு நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 வயதாகும் ராஸ்டன் சேஸ் இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,265 ரன்களையும், 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக சாய் ஹோப் செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு தனது பெயரை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என சாய் ஹோப் கூறியதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.