ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவரைச் சந்தித்த ஜெய் ஷா..! கிரிக்கெட் - கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவரைச் சந்தித்தது குறித்து...
Jay Shah meets UEFA president Ceferin in Munich .
சாம்பியன்ஸ் லீக் கோப்பையுடன் யுஇஎஃப்ஏ தலைவர், ஐசிசி தலைவர். படம்: எக்ஸ் / ஜெய் ஷா
Published on
Updated on
1 min read

ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவர் அலெக்சாண்டர் செஃபெரினைச் சந்தித்தார்.

கிரிக்கெட் இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக இருந்தாலும் உலக அளவில் கால்பந்து போட்டிக்கே ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

பிசிசிஐ செயலராக கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த ஜெய் ஷா கடந்த டிச.2024 முதல் ஐசிசியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

உலக அரங்கில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த ஜெய் ஷா உழைத்து வருகிறார்.

சமீபத்தில் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி இன்றிரவு நடைபெறும் நிலையில், அதனை நடத்தும் யுஇஎஃப்ஏ தலைவரைச் சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய் ஷா கூறியதாவது:

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்பாக கிரிக்கெட்டை பிரதிநிதிப்படுத்தவும் யுஇஎஃப்ஏ தலைவருடன் கலந்துரையாடியது பெருமையாக இருக்கிறது.

கிரிக்கெட்டை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஐசிசியின் முனைப்பின்போது அடுத்த விளையாட்டின் தலைவர்களுடன் நேரம் செலவிடுவது எப்போதும் மதிப்பு மிக்கது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com