

மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மழை பெய்தால் இறுதி ஆட்டம் நவ. 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வியாழக்கிழமை முன்னேறியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ. 2) இறுதி ஆட்டம் நடைபெறும் நவி மும்பையில், மழை பெய்ய 63 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அன்றைய நாளில், மாலை 4 மணி முதல் 7 மணி வரை மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறதாம்.
முன்னதாக, இதே டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான லீக் ஆட்டமொன்று மழையால் முழுமையாக தடைபட்டதும் கவனிகத்தக்கது.
ஒருவேளை மழையால் இறுதி ஆட்டம் தடைபட்டால், திங்கள்கிழமைக்கு(நவ. 3) ஒத்திவைக்கப்படலாம். ஆனால், அன்றைய நாளிலும் நவி மும்பையில் மழைக்கு 55 சதவீத வாய்ப்பிருக்கிறதாம்! ஒருவேளை இறுதி ஆட்டம் தடைபட்டால் இரு அணிகளுமே சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.