

மும்பை: மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சேஸிங் செய்து வரும் தென்னாப்பிரிக்கா முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. இந்த நிலையில், அடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஷஃபாலி வர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்துள்ள தென்னாப்பிரிக்கா கடைசி 25 ஓவர்களில் 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து களத்தில் நங்கூரமிட்டுள்ளார். கைவசம் 6 விக்கெட்டுகள் இருப்பதால் வெற்றி வாய்ப்பு எந்தப் பக்கம் என்பது மதில் மேல் பூனைக் கதையாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.