தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
கேப்டன் ஷுப்மன் கில் - துணை கேப்டன் ரிஷப் பந்த்.
கேப்டன் ஷுப்மன் கில் - துணை கேப்டன் ரிஷப் பந்த்.
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 14 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி குவாஹாட்டியில் 22 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணியை புதன்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் தேவ்ஜித் சாய்க்கியா வெளியிட்டார்.

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சர் - டெண்டுல்கர் டிராபி தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் காலில் எலும்பு முறிவு காரணமாக தொடரில் இருந்து வெளியேறி ஓய்வில் இருந்த நட்சத்தி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தென்னாப்பிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் 90 ரன்கள் விளாசியிருந்தார். இதனால், தமிழக வீரர் ஜெகதீஷன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தோள்பட்டை காயத்தில் இருந்து விலகியிருந்த வங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி விவரம்

  1. ஷுப்மன் கில் (கேப்டன்)

  2. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துணை கேப்டன்

  3. யஷஸ்வி ஜெய்ஸ்வால்

  4. கே.எல். ராகுல்

  5. சாய் சுதர்சன்

  6. தேவ்தத் படிக்கல்

  7. துருவ் ஜூரல்

  8. ரவீந்திர ஜடேஜா

  9. வாஷிங்டன் சுந்தர்

  10. ஜஸ்பிரித் பும்ரா

  11. அக்‌ஷர் பட்டேல்

  12. நிதீஷ்குமார் ரெட்டி

  13. முகமது சிராஜ்

  14. குல்தீப் யாதவ்

  15. ஆகாஷ் தீப்

கேப்டன் ஷுப்மன் கில் - துணை கேப்டன் ரிஷப் பந்த்.
ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!
Summary

Rishabh Pant returns! India name Test squad for South Africa series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com