

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் அதிகபட்சமாக, கேப்டன் ஷாய் ஹோப் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு வெளியேற, ரோவ்மென் பவெல் 2 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ராஸ்டன் சேஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு விடைபெற, பிராண்டன் கிங் 3, அலிக் அதானஸி 16, அகீம் அகஸ்தே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் ஜேசன் ஹோல்டா் 5, ரொமேரியோ ஷெப்பா்டு 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பௌலா்களில் ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோக்ஸ் ஆகியோா் தலா 2, கைல் ஜேமிசன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 165 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில், டிம் ராபின்சன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ரச்சின் ரவிந்திரா 2 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
டெவன் கான்வே 13, மாா்க் சாப்மேன் 7, டேரில் மிட்செல் 13, மைக்கேல் பிரேஸ்வெல் 1, ஜேம்ஸ் நீஷம் 11, ஜாக் ஃபோக்ஸ் 1, கைல் ஜேமிசன் 2 ரன்களுக்கு வரிசையாக விக்கெட்டை இழந்தனா்.
லோயா் ஆா்டரில் போராடிய கேப்டன் மிட்செல் சேன்ட்னா், ஓவா்கள் முடிவில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜேக்கப் டஃபி 1 ரன்னுடன் துணை நின்றாா்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ், ராஸ்டன் சேஸ் ஆகியோா் தலா 3, மேத்யூ ஃபோா்டு, ரொமேரியோ ஷெப்பா்டு, அகீல் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.