

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 7) அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 16 முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
14 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக வழிநடத்துகிறார். மூத்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு வில்லியம்சன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கோப் டஃபி, ஸாக் ஃபோல்க்ஸ், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், பிளார் டிக்னர் மற்றும் வில் யங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.