8 ஆண்டுகளுக்குப் பிறகு... உள்ளூர் போட்டியில் கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸி. உள்ளூர் போட்டியில் மீண்டும் கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி...
Steve Smith
ஸ்டீவ் ஸ்மித்படம்: எக்ஸ் / கிரிக்கெட்.காம்.ஏயு
Published on
Updated on
1 min read

ஆஸி. உள்ளூர் போட்டியில் மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் (36 வயது) டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார்.

தெ.ஆ.வுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வீரர் பந்தினை சேதப்படுத்தியதால் அப்போது கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்மித் விலகினார். பின்னர், கம்மின்ஸ் இல்லாத நேரங்களில் கேப்டனாக இருந்து வருகிறார்.

கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் முதல் போட்டியில் இல்லாததால் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

தற்போது, உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் தனது பிறந்த நகருக்கான நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இந்த அணிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

கேப்டனாக இந்த அணியில் ஸ்மித் 985 ரன்கள் குவித்துள்ளார். அதில் சராசரி 70.4-ஆக இருக்கிறது.

ஆஸி. அணிக்கு கேப்டனாக ஸ்மித் விளையாடும்போது சராசரி 68.98-ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Steve Smith has been re-appointed as captain of the Australian domestic team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com