

இந்திய வீரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
டி20யில் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய, 5.4 ஓவர்களில் மின்னல் குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 1,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் முழுநேர நாடுகளின் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
டி20யில் அதிவேகமாக 1,000 ரன்கள் அடித்தவர்கள்
1. அபிஷேக் சர்மா - 528 பந்துகள்
2. சூர்யகுமார் யாதவ் - 573 பந்துகள்
3. பில் சால்ட் - 599
4. க்ளென் மேக்ஸ்வெல் - 604
இன்னிங்ஸ் கணக்கின்படி பார்த்தால் விராட் கோலி இவருக்கு முன்பாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.