

இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் இந்தியராக சாதனை படைக்கவிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இன்று (நவ.8) மதியம் 1.45 மணிக்கு இந்தியா மோதுகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
கடைசி டி20யில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்தால் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியராக சாதனை நிகழ்த்துவார்.
கடைசி டி20 போட்டியில் பும்ரா ஒரு விக்கெட் எடுத்து ஹார்திக் பாண்டியாவை முந்தினார்.
இந்தியர்கள் வரிசையில் 99 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடமும் அர்ஷ்தீப் 105 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் இருக்கிறார்.
பும்ராவின் விக்கெட்டுகள் விவரம்
டெஸ்ட் போட்டிகளில் - 226 விக்கெட்டுகள் (50 போட்டிகளில்)
ஒருநாள் போட்டிகளில் - 149 விக்கெட்டுகள் (89 போட்டிகளில்)
டி20 போட்டிகளில் - 99 விக்கெட்டுகள் (79 போட்டிகள்)
முதல் இந்தியராக அனைத்து வடிவலான சர்வதேச போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்துவரா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.