

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி படைத்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (நவம்பர் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையிலும் உள்ளது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஈஷ் சோதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 155 விக்கெட்டுகளுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த நிலையில், அந்த சாதனையை தற்போது ஈஷ் சோதி முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
ரஷித் கான் - 182 விக்கெட்டுகள்
டிம் சௌதி - 164 விக்கெட்டுகள்
ஈஷ் சோதி - 156 விக்கெட்டுகள்
முஸ்தஃபிசுர் ரஹ்மான் - 155 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் - 149 விக்கெட்டுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.