

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குத் தயாராகி வருகின்றன.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கொல்கத்தாவுக்கு வந்தடைந்தனர். காயம் காரணமாக நீண்ட நாள்களாக அணியில் இடம்பெறாமலிருந்த கேப்டன் டெம்பா பவுமா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (நவம்பர் 11) முதல் இரண்டு அணிகளும் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்ட் தொடர் விவரம்
முதல் போட்டி - நவம்பர் 14-18, கொல்கத்தா
இரண்டாவது போட்டி - நவம்பர் 22-26, குவாஹாட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.