

ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி தில்லியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி தில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை தில்லி அணி தனது சொந்த மண்ணில் ஜம்மு காஷ்மீர் உடன் மோதத் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த தில்லி 211க்கு ஆல் அவுட்டாக, ஜம்மு - காஷ்மீர் அணி 310 ரன்கள் குவித்தது.
அணியின் கேப்டன் டோக்ரா சதம் அடித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் தில்லி 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக அந்த அணியின் கேப்ட்ன் ஆயுஸ் பதோனி 72 ரன்கள் குவித்தார். அடுத்து ஆடிய ஜம்மு காஷ்மீரின் தொடக்க வீரர் கம்ரான் இக்பால் 133 ரன்கள் எடுத்து அசத்தினார்.
43.3 ஓவர்களில் மூன்றாவது நாளில் 179/3 ரன்கள் எடுத்து வென்றது.
ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஜம்மு காஷ்மீரின் ஆகிப் நபி தார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், ரஞ்சி கோப்பை வரலாற்றில் தில்லியை முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் வென்று வரலாறு படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.