

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் மீண்டும் பந்துவீச தொடங்கியது அந்த அணியின் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷஸ் தொடருக்கு முன்பாக இவர் பந்துவீசுவது நல்ல மாற்றத்தை உண்டாக்குகிறது என விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆஷஸ் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி பெர்த் திடலில் தொடங்குகிறது.
கடைசியாக அக்.2024-இல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிரீன் பந்துவீசாமல் இருக்கிறார்.
தற்போது, உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் பந்து வீசிவருகிறார். அவர் வீசிய மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட்டினையும் எடுத்துள்ளார்.
இந்த கம்பேக் மூலம் ஆஷஸ் தொடரில் கேமரூன் கிரீனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.