அபு தாபியில் ஐபிஎல் மினி ஏலம்; எப்போது தெரியுமா?

ஐபிஎல் மினி ஏலம் அபு தாபியில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் மினி ஏலம் அபு தாபியில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலம் கடந்த 2023 ஆம் ஆண்டு துபையிலும், கடந்த ஆண்டு சௌதி அரேபியாவின் ஜெட்டாவிலும் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த முறை ஐபிஎல் ஏலம் அபு தாபியில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சௌதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற்றதால், இம்முறை ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 அல்லது டிசம்பர் 16 ஆம் தேதியில் இந்த மினி ஏலம் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், அபு தாபியில் ஐபிஎல் ஏலத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஐபிஎல் ஏலம் தொடர்பான இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

Summary

The BCCI has announced that the IPL mini auction will be held in Abu Dhabi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com