

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்லவிருக்கும் ரவீந்திர ஜடேஜா அந்த அணிக்கு கேப்டாகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களாக, ஐபிஎல் தொடரில் சாம்சன் - ஜடேஜா பரிமாற்றங்கள்தான் பேசுபொருளாக இருக்கின்றன.
சிஎஸ்கேவில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா (37 வயது) ராஜஸ்தானுக்கும், அங்கிருக்கும் சஞ்சு சாம்சன் (31 வயது) சிஎஸ்கே அணிக்கும் மாறுவதாகக் கூறப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாகுவார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜடேஜா, மீண்டும் சொந்த மண்ணின் அணியில் விளையாடி ஓய்வை பெற இது நல்ல வாய்ப்பாக இருக்குமெனவும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தினை கூறியுள்ளார்கள்.
சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவின் மாற்றத்தை ஏற்க முடியாமல் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
254 ஐபிஎல் போட்டிகளில் 3,260 ரன்கள் குவித்துள்ளார். 170 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் நிராகரிக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக மாறினால் அவரது கிரிக்கெட் பயணத்திற்கு நல்ல மாற்றமாக இருக்குமென முன்னாள் வீரர்கள் கருத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.