எங்களுக்கு மன்னிப்பே கிடையாதா? விமர்சனங்களுக்குப் பதிலளித்த பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பேசியதாவது...
Pakistan's Haris Rauf celebrates after the dismissal of Sri Lanka's Kamil Mishara during the first one day international cricket match in Rawalpindi.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹாரிஸ் ரௌஃப். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் மனிதர்கள் இயந்திரம் போல வேலைசெய்ய வேண்டுமா எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது அந்த நாட்டில் வீரர்கள் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை உடனான முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஹாரிஸ் ரௌஃப் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஆசிய கோப்பையில் தவறான சைகை காட்டியதற்காக இரண்டு போட்டிகளில் தடை செய்யப்பட்டார்.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஹாரிஸ் ரௌஃப் 3.4 ஓவர்களில் 50 ரன்கள் வழங்கினார். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்த மோசமான சாதனை படைத்தவராக அவர் மாறியது குறித்து இந்தப் போட்டிக்குப் பிறகு ரௌஃப் பேசியதாவது:

நாங்கள் இயந்திரமல்ல, மனிதர்கள்...

மனிதர்களாகிய நாங்கள் இயந்திரம்போல செயல்பட வேண்டுமென நினைக்கிறார்கள். எங்களுக்கு மன்னிப்பே கிடையாது. நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் மோசமான நாள்கள் உண்டு.

முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. மோசமான நாளினால் நீங்கள் இறந்துவிடப் போவதில்லை.

திறமைகளை நம்பி, தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல்கிறோம். கிரிக்கெட்டில் எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் மோசமான நாள் என்பது உண்டு.

டெஸ்ட்டில் விளையாட விரும்புகிறேன்...

அனைவருக்கும் கருத்துகள் இருக்கின்றன; முன்பே சொன்னதுபோல் எங்களுக்கு மன்னிப்பே கிடையாது.

உங்களுடைய 10 நல்ல போட்டிகளைவிட ஒரு மோசமான போட்டிதான் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமென விரும்புகிறேன்.

பிசிபி எப்போது வேண்டுமானாலும் என்னைத் தேர்வு செய்யலாம். ஆனால், அதற்கு முன்பாக ஒரு தகவல் அளித்தால் பயிற்சி செய்ய உதவியாக இருக்கும். ஏனெனில் சிவப்பு பந்தில் ஒரே நாளில் அதிக ஓவர்களை வீச வேண்டியுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com