ஐசிசி அக்டோபர் மாத சிறந்த வீராங்கனை விருதை தட்டிச்சென்ற லாரா வோல்வார்ட்!

ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளதைப் பற்றி...
South African captain Laura celebrates after scoring a century
தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.படம்: ஏபி
Published on
Updated on
1 min read

ஐசிசி அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர்/ வீராங்கனை விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டனர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட்டுக்கு ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான உலகக் கோப்பைத் தொடர் தொடக்கம் முதலே சிறப்பானதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோதிலும், தென்னாப்பிரிக்க அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்ததில் முக்கியப் பங்கு வகித்தார் லாரா வோல்ட்வார்ட்.

இந்தியாவுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் 70 ரன்கள் எடுத்து அசத்திய லாரா வோல்வார்ட், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

அரையிறுதிச் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 169 ரன்கள் எடுத்து அசத்திய லாரா வோல்வார்ட், இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் சதம் விளாசினார். மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடிய லாரா வோல்வார்ட் 67.14 சராசரியுடன் 470 ரன்கள் குவித்திருந்தார்.

South African captain Laura celebrates after scoring a century
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த ஷர்துல் தாக்கூர்!
Summary

Laura Wolvaardt, the highest run-getter at the Women’s Cricket World Cup, has won the ICC Women’s Player of the Month for October 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com