

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருப்பினும், கடந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அவரது சராசரி 56.16 ஆகவும், எகானமி 11.23 ஆகவும் இருந்தது.
இந்த நிலையில், முகமது ஷமி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
35 வயதாகும் முகமது ஷமி கடைசியாக இந்த ஆண்டு மார்ச்சில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. உடல்தகுதி காரணமாக அவரால் தேசிய அணியில் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
இந்த நிலையில், முகமது ஷமி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கிக் கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் நாளை (நவம்பர் 15) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.