

சிஎஸ்கே அணிக்கு தேர்வாகியிருக்கும் சஞ்சு சாம்சனை வரவேற்று, அந்த அணியின் நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.
எம்.எஸ். தோனியின் ஓய்வுக்குப் பிறகு, சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவின் கேப்டனாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு மாற்றம் சிஎஸ்கே அணியில் நிகழ்ந்துள்ளது.
சிஎஸ்கேவின் ஜடேஜா, சாம் கரணை விடுவித்து சஞ்சு சாம்சனை பெற்றுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சமூக வலைதளத்தில் வெல்கம் சஞ்சு வைரலாகி வரும் நிலையில், எம்.எஸ்.தோனியுடன் ராஜஸ்தான் சீருடையில் இருக்கும் சஞ்சு சாம்சனின் காட்சிகளை மாற்றி, சிஎஸ்கே உடையணிந்து ரசிகர்களைப் பார்க்கும்படி வெளியிட்டுள்ளது.
ஃபகத் ஃபாசிலின் பிரபல மலையாள பாடலான இல்லுமினாட்டி பாடலுடன் வெளியிட்ட இந்த விடியோவின் கடைசியில், “சேட்டன் வந்தல்லே...” எனக் குறிப்பிட்டுள்ளது.
தற்போதையை சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருக்கிறார்.
காயம் காரணமாக கடந்த சீசனில் வெளியேறிய நிலையில், தோனி கேப்டனாக செயல்பட்டார். இருப்பினும் மோசமான நிலையில் சிஎஸ்கே இருந்தது.
தற்போது, சஞ்சு சாம்சன் அணியில் இணைந்துள்ளதால் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அடுத்த சீசன் இல்லாவிட்டாலும் அதற்கடுத்து சஞ்சு சாம்சன் கேப்டனாகுவார் என அஸ்வின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.