

சிஎஸ்கே நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவின் விடைபெறுதலுக்காக உருக்கமான விடியோவை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.14 கோடிக்கு ஜடேஜா விற்கப்பட்டுள்ளார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
சிஎஸ்கே நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது. அதில் ஜடேஜா பேசியதாவது:
அணியில் இணைந்தது பற்றி...
2012-இல் சிஎஸ்கே அணியில் முதல்முறையாக இணைந்தேன். அப்போது நான் பதற்றமாக இருந்தேன். அணியில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து சிலவற்றையாவது கற்க வெண்டுமென ஆர்வமாக இருந்தேன். அப்போதிலிருந்து சிஎஸ்கேவில் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்றார்.
பின்னர் சில புகைப்படங்களைக் காண்பிக்கப்பட்டது, அதற்கு அவர் பதில் அளித்தார்.
தலையில் சிஎஸ்கே என எழுதி இருந்தது எதனால்? என்னால் முடியும் எனும்போது அதைச் செய்தேன்.
சர் ஜடேஜா பட்டம் குறித்து? எம்.எஸ்.தோனிதான் அந்தப் படத்தை வழங்கினார். இதற்கு பதில் அவர் கூறினால்தான் சரியாக இருக்கும்.
ரன் ஓடும்போது விழுந்ததும் தோனியின் செய்கையும்... ரன் ஓடும்போது தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். அப்போது தோனி என்னை ஓடு ஓடு என்று ஜாலியாக கத்தினார்.
கேப்டன்சி குறித்து... மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய பொறுப்பை ஏற்க வேண்டும். தோனி ஏற்கெனவே ஒரு பாரம்பரியத்தை உண்டாக்கியுள்ளார். அதனை எடுத்துச்செல்ல வேண்டும்.
சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து... சிஎஸ்கே குறித்து அதன் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். நாங்கள் நன்றாக விளையாட வேண்டும், வெல்ல வேண்டுமென நினைப்பார்கள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி என அவர் பேசிய வசனத்தோடு, எங்கள் தளபதி, எங்கள் ராஜா என்ற வசனத்துடன் விடியோ நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.