தலைசிறந்த கேப்டன்: தோல்வியே காணாத டெம்பா பவுமா!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா குறித்து...
South Africa's captain Temba Bavuma looks at the ball at the end of play on the first day of the first cricket test match in Kolkata.
டெம்பா பவுமா. படம்: ஏபி
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தனது டெஸ்ட் தலைமையில் தோல்வியே காணாதவராக சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க த்ரில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு டெம்பா பவுமா 2023 முதல் தோல்வியே காணாதவராக இருக்கிறார்.

முதல் கறுப்பின கேப்டனாக பொறுப்பேற்ற அவர் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இதுவரை, 11 போட்டிகளில் 10 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் சமனில் முடிந்து தோல்வியே காணாமல் இருக்கிறார்.

15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய மண்ணில் வெற்றியையும் பெற்று அசத்தியுள்ளார்.

Summary

South Africa captain Temba Bavuma has set a record of never losing a Test match under his captaincy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com