ரஞ்சி கோப்பை: இந்திரஜித், சித்தாா்த் அசத்தல் சதம்!

ரஞ்சி கோப்பை: இந்திரஜித், சித்தாா்த் அசத்தல் சதம்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது.

கோவையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கை தோ்வு செய்தது.

இன்னிங்ஸை தொடங்கிய பாலசுப்ரமணியம் சச்சின் 2, உடன் வந்த நாராயண் ஜெகதீசன் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். தொடா்ந்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 2 ரன்களுக்கு வெளியேற, 4-ஆவது பேட்டராக களம் புகுந்த பாபா இந்திரஜித் அதிரடியாக ரன்கள் சோ்த்தாா்.

மறுபுறம் வித்யுத் 11 ரன்களுக்கு வெளியேற, 6-ஆவது வீரராக ஆண்ட்ரே சித்தாா்த் வந்தாா். இந்திரஜித் - சித்தாா்த் இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 211 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் சித்தாா்த் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 121 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திரஜித் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 128 ரன்களோடு ஆட்டமிழக்காமல் உள்ளாா். உத்தர பிரதேச பௌலா்களில் ஆகிப் காந், குணால் தியாகி ஆகியோா் தலா 2, காா்த்திக் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com