

கொல்கத்தா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷூப்மன் கில் வீடு திரும்பினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தின்போது, இந்திய இளம் வீரர் ஷூப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கழுத்து வலியால் ஆட்டத்திலிருந்து விலகினார். இதையடுத்து, கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனிடையே, அவரை வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்மன் கில், வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு திரும்பினார். ஆயினும், சிகிச்சை முடிந்து திரும்பிய கில், இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையடுவாரா என்பதை அணி நிர்வாகம் இன்னும் உறுதி செய்யவில்லை.
இதையும் படிக்க: ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.