

இந்திய வீரர் முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.
இந்தப் போட்டியில் அவர் வீசிய பந்தில் ஸ்டம்ப் உடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் தெ.ஆ. எதிரான போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றிபெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில், இரண்டாவது இன்னிங்ஸில் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தெ.ஆ. வீரர் ஹார்மரை போல்ட் ஆக்கி ஸ்டம்பினை உடைத்தார்.
இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முகமது சிராஜ் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
2025-இல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
1. பி முஸர்பானி - 42 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வே)
2. முகமது சிராஜ் - 41 விக்கெட்டுகள் (இந்தியா)
3. நோமன் அலி - 30 விக்கெட்டுகள் (பாகிஸ்தான்)
4. மிட்செல் ஸ்டார் - 29 விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா)
5. ஜஸ்ப்ரீத் பும்ரா - 29 விக்கெட்டுகள் (இந்தியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.