சிக்ஸர் அடித்து பணம் சம்பாதியுங்கள்... இந்தியர்களை விமர்சித்த பீட்டர்சன்!

கொல்கத்தா டெஸ்ட் போட்டி குறித்து பீட்டர்சன் கூறியதாவது...
Kevin pietersen
கெவின் பீட்டர்சன். படம்: எக்ஸ் / கெவின் பீட்டர்சன்
Published on
Updated on
1 min read

முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர்களின் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்காலத்திய இளைஞர்கள் சிக்ஸர் அடித்து பணம் சேர்க்கவே விரும்புகிறார்கள் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்திய அணி 124 ரன்களை கொல்கத்தாவில் அடிக்க முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த 15 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக இந்திய மண்ணில் வென்றுள்ளது.

இந்தப் போட்டிக்குப் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளருமான கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

முதலில் ஆடுகளத்தைப் பார்த்து ரன்களை அடிக்க வேண்டும். அதன் முடிவுதான் கொல்கத்தா டெஸ்ட்டில் நடந்தது. நவீன கால பேட்டர்களின் தொழில்நுட்பம் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

நவீனகால பேட்டர்களின் குறைகள்...

பேட்டர்கள் தற்போது சிக்ஸர்கள், ஸ்விட்ச் - ஹிட் அடிக்கும்படியாக வளர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு இன்னிங்ஸை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் எப்படி ஆட்டமிழக்காமல் விளையாட வேண்டுமெனவும் கற்கவில்லை.

இதுதான் எதார்த்தம். தற்போது வீரர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் என நான் பல வீரர்களுடனான உரையாடலில் பங்கேற்றுள்ளேன்.

நவீனகால போட்டியின் போக்கை வைத்துப் பார்க்கும்போது வீரர்களை மட்டுமே குறைகூற முடியாது.

தற்போதைய விளையாட்டின் முக்கியத்துவம் ஆட்டமிழக்காமல் ஆடுவதோ அல்லது சுழல்பந்துகளை ஆடுவதிலோ இல்லை.

சிக்ஸர் அடித்து, பணம் சம்பாதியுங்கள்...

இதற்கு மாறாக, அதீத வெளிச்சம், அதீத சப்தம், கிரிக்கெட் சங்கத்திற்கு பண வருவாய், தனிப்பட்ட வருவாய் என மாறிவிட்டது.

அறையில் இருக்கும் யானைப் போல பணம் இருப்பதால் அதைப்பற்றி யாருமே பேசுவதில்லை. ஆனால், நான் பேசுவேன். அதுதான் உண்மையாகவும் இருக்கிறது.

வீரர்களிடம் உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தைச் சேருங்கள். வீணடியுங்கள். முடிவு எடுக்கும் நிலையில் நீங்களே இருப்பதால், அதையே செய்யுங்கள். ஆனால், அதைப்பற்றி பேச அனுமதியில்லை!

தொடர்ந்து சிக்ஸர்கள், ஸ்விட்ச்-ஹிட் அடியுங்கள், உங்களது வங்கியில் சேமிப்பை உயர்த்துங்கள் டியூட்ஸ்! எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com