

வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
38 வயதாகும் இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வங்கதேச வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
விக்கெட் கீப்பரும் பேட்டருமான முஷ்ஃபிகுர் ரஹீம் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியை இன்று (நவ.19) விளையாடுகிறார்.
முஷ்ஃபிகுர் ரஹீம் தனது குழந்தையுடன் இந்தப் போட்டியில் விளையாடுவதற்கான தொப்பியை வாங்கினார். தனது குடும்பத்திற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் கூறினார்.
அயர்லாந்து உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்து வருகிறது.
முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
தற்போது, வங்கதேசம் 130.3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் முஷ்ஃபிகுர் ரஹீம், மொமினுல் ஹர்கி விளையாடி வருகிறார்கள்.
99 டெஸ்ட் போட்டிகளில் முஷ்ஃபிகுர் ரஹீம் 6,351 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 12 சதங்கள், 27 அரைசதங்கள் அடங்கும். 13ஆயிரத்துக்கும் அதிகமான பந்துகளை விளையாடியுள்ளார்.
இவருக்கு ஐசிசியும் சிறப்புப் போஸ்டரை வெளியிட்டுள்ளது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.