

நியூசிலாந்துக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்களில் 247/9 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 109 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெல்ல, இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழையின் காரணமாக 34 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாப் ஆர்டர் பேட்டர்கள் சொதப்பிய நிலையில் கேப்டனான ஷாய் ஹோப் அதிரடியாக ரன்களை குவித்தார்.
நியூசிலாந்து சார்பாக நாதன் ஸ்மித் 4, ஜேமிசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வென்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.