

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் குவாஹாட்டிக்குச் செல்வார் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகம் என பிசிசிஐ கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா டெஸ்ட்டில் ஸ்விப் ஷாட் அடிக்கும்போது ஷுப்மன் கில்லுக்கு கழுத்து வலி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பிசிசிஐ மருத்துவக் குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
கில் இல்லாத காரணத்தினால் 10 வீரர்களுடன் பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இரண்டாவது டெஸ்ட் வரும் 22ஆம் தேதி குவஹாட்டியில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா கூறியதாவது:
பிசிசிஐ அளித்த மருத்துவ உதவிக்கு ஷுப்மன் கில் நல்லபடியாக ஒத்துழைப்பு அளித்தார். நவ.19ஆம் தேதி அணியுடன் சேர்ந்து குவாஹாட்டிக்குச் செல்வார்.
ஷுப்மன் கில் தொடர்ந்து பிசிசிஐ கண்காணிப்பில் இருப்பார். அவர் இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடுவாரா என்பது சூழ்நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் என்றார்.
இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி அல்லது ஷுப்மன் கில் யாராவது ஒருவர் விளையாட வேண்டிய சூழ்நிலை வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.