

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விலகியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ககிசோ ரபாடா, காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ககிசோ ரபாடா விலகுகிறார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தைக் காட்டிலும் குவாஹாட்டி ஆடுகளம் நன்றாக காணப்படுகிறது. ரபாடாவுக்குப் பதிலாக மாற்று வீரரை நாளை காலையில் நிலவும் சூழலைக் கொண்டு முடிவு செய்வோம் என்றார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.