

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு ஒரு நாள் தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதியும் அதன் பின் டிசம்பர் 9ஆம் தேதி டி20 தொடரும் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்து வலியால் இந்திய கேப்டன் சுப்மன் கில், தொடரில் இருந்து விலகிய நிலையில் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ருதுராஜ் அணிக்கு திரும்பியுள்ளார். அண்மையில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் ருதுராஜ் களமிறங்கி சதம் அடித்தார். இதனால் அவருக்கு தொன்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகமது சிராஜ், அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்திய ஒருநாள் அணி விபரம்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்படன்)(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் துருவ் ஜுரெல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.