

தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்கியது ஏன் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்து அணி உள்பட யாருமே எதிர்பார்க்காத இந்த யுக்தியினால் ஆஸி. அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
வழக்கமாக மிடில் ஆர்டராக களமிறங்கும் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கினார்.
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கவாஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் யாருமே எதிர்பார்க்காத டிராவிஸ் ஹெட் களமிறங்கி ஆட்டத்தையே மாற்றினார்.
இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது:
இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையில் யாரை தொடக்க வீரராக களமிறக்கலாம் என நாங்கள் பேசிவந்தோம்.
அப்போது வந்த டிராவிஸ் ஹெட் வேண்டுமென்றே, ‘நான் இறங்குகிறேன். நான் கண்டிப்பாக இறங்குவேன்’ எனக் கூறினார்.
நானும் போய் விளையாடு என்றேன். முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஷேன் தொடக்க வீரராகவும் நான் மூன்றாவதும் இறங்கியது எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை.
டிராவிஸ் ஹெட் ஆஷஸில் தலைசிறந்த ஓர் ஆட்டத்தை ஆடிவிட்டார்.
நாங்கள் நாதன் லயனை களமிறக்கவும் சிந்தித்து வந்தோம் என புன்னகையுடன் ஸ்டீவ் ஸ்மித் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.