

குவாஹாட்டி டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம் இந்தப் போட்டியில் அந்த அணி 314 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
கொல்கத்தா டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக செனுரன் முத்துசாமி 109, யான்சென் 93 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் 48 ரன்கள் எடுத்தார்கள்.
எதிர்பாராத விதமாக குல்தீப் யாதவ் 100க்கும் மேற்பட்ட பந்துகள் பேட்டிங் செய்து அசத்தினார்.
இருப்பினும் மார்கோ யான்செனின் அபாரமன பந்துவீச்சினால் குல்தீப் ஆட்டமிழந்தார். இறுதியில் யான்சென் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஃபாலோ -ஆன் வாய்ப்பு இருந்தும் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் பேட்டிங் விளையாடியது.
மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தது. ரியான் ரிக்கல்டன் 13, எய்டன் மார்கரம் 12 ரன்கள் எடுத்திருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.