

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், கடைசி நிமிடத்தில் அவரது திருமணம் நின்றது.
மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தந்தைக்கு ஆஞ்சியோகிராபி பரிசோதனை மேற்கொண்டதில் அடைப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், அழுத்தம் காரணமாக மாரடைப்பு போன்ற வலி ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் பாலிவுட் இசையமைப்பாளரும் அவரது காதலருமான பலாஷ் முச்சலுடன் மீண்டும் திருமணம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்தான் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பலாஷ் முச்சல் ஸ்மிருதியை காதலிக்கும் போதே வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாஷ் முச்சல் திருமணத்திற்குச் சில நாள்கள் முன் பெண் நடன இயக்குநருடன் அந்தரங்கமாக இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டதாக சில ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, திருமணம் தொடர்பாக பதிவிடப்பட்ட புகைப்படம், விடியோக்கள் அனைத்தையும் ஸ்மிருதியும் அவரது தோழிகளும் சக வீராங்கனைகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், திருமணம் குறித்த எந்த மறுஅறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.